கதை
மலையான்குளத்தில் பிறந்தேன். புதுக்குடியில் குடும்பம். இரண்டுமே அம்பாசமுத்திரம் தொகுதிக்குள் தான்.
பிறகு வெளிநாடு. நெதர்லாந்து. பின்பு இத்தாலி. ஏறத்தாழ பத்து ஆண்டுகள்.
வேலை பார்த்தேன். ஆனால் கவனித்ததும் நிறைய. அங்கே ஒரு சாதாரண மனிதன் தன் ஊராட்சி எவ்வளவு பணம் வாங்கியது, எதற்குச் செலவழித்தது என்பதை இணையத்தில் பார்க்க முடியும். கேள்வி கேட்டால் பதில் வரும். கால அவகாசம் இருக்கும்.
நம் ஊரில் மனு கொடுத்தால் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. அது நம் மக்களின் குறை அல்ல. யாரும் சொல்லித் தரவில்லை.
அதைச் சொல்லித் தருவதற்காகத் திரும்பி வந்தேன்.
Born in Malayankulam with family roots in Pudukudi — both inside the Ambasamudram constituency. Roughly ten years in the Netherlands and Italy, then a return to Tirunelveli district to open a free petition and scheme-access centre for rural residents.